பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களான டேனீஸ் விருசாலி தம்பதியினர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 11 மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீந்தி சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் நீச்சலை ஊக்குவிக்கும் நோக்கில் இவர்கள் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளனர். அதிகாலை 4:30 மணிக்கு தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி, மதியம் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.