அதனைத் தொடர்ந்து திருவிழாவின் நிறைவு நாளான இன்று பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பரமக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த பால்குட ஊர்வலமானது அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வாசலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பின் பக்தர்கள் எடுத்துவந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் பாலாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.