இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்றால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து மின் வயரில் விழுந்தன. இதனால் மின்சார கம்பிகள் ஒன்றன் மீது ஒன்று உரசி தீப்பொறி கிளம்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.