தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திற்கும் அரசு சார்பில் திறன்பலகை (ஸ்மார்ட் போர்டு) வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் நம்புதாளை துவக்கப்பள்ளிக்கு நான்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.