அப்போது, சீனியப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் மூன்று சாக்கு மூட்டைகளை இருவர் படகில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அந்த மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர். பின்னர், போலீசார் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது, காலணி உதிரிப் பாகங்கள் இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காலணி உதிரிப் பாகங்கள் மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்