ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியை சேர்ந்த வேணுபாரதி (30) வீட்டில் இருந்த படியே அகர்பத்தி தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என யூடியூப்பில் விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு கொண்டு அகர்பத்தி இயந்திரம் வாங்க ரூ. 5 லட்சம் செலுத்தியுள்ளார். அதற்குப்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் 1 மாதத்திற்குள் பணத்தை மீட்டு வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.