ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணியைச் சேர்ந்த மீனவர் சிலம்பரசன், கன்னிராஜபுரம் கடற்கரையில் காயங்களுடன் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காரில் வந்த மர்ம கும்பல் சிலம்பரசனைக் அடித்துக் கொன்று கடலில் வீசியதாகக் கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.