இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவி வரும் வறண்ட வானிலைக்கு மத்தியில், வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த நாளான 22 ஆம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி