ராமநாதபுரம்: ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கைது

ராமநாதபுரம் அருகே வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதன், தனது தாயார் பெயரில் நிலத்தை பதிவு செய்ய வந்த ஹாலிக் அலாவுதீனிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.15 லட்சம் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாலிக் அலாவுதீன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்தை அயூப்கானிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அயூப்கான் மற்றும் சார்பதிவாளர் ராமநாதனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி