ராமநாதபுரம்: ரூ.2 கோடி வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சீனியப்பா தர்கா கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. தப்பியோடியவர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி