ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தில் மீனவர் நாகூர் செல்வம் (33) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். படகு நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த அடையாள வேலுவை (25) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அடையாள வேலுவின் சகோதரர் ராக்கப்பனுக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ராக்கப்பனை போலீஸார் தேடி வருகின்றனர்.