ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காடர்ந்த குடி கிராமத்தைச் சேர்ந்த குரு அனுஸ்ரீ, 08.02.2026 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நேஷனல் லெவல் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இதுவரை கராத்தே போட்டிகளில் பங்கேற்று 32 பதக்கங்களை வென்றுள்ள குரு அனுஸ்ரீயை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கராத்தே மாஸ்டர்கள் பாராட்டினர்.