பரமக்குடி பேருந்து நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான 120 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. தொட்டியில் இன்று (மார்ச்.10) மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மேலே ஏறிக்கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் குதிக்கும் காட்சிகளை கீழே இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது