பரமக்குடியில், சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் பேரன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முன்னிலையில் நேற்று தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வாக்குகள் திமுகவிலிருந்து பிரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.