பரமக்குடி: சரக்கு வாகன விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

பரமக்குடியில் இறந்தவரின் உடலைப் பார்க்கச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். பூபதி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருணா, ராமேஸ்வரி, ஈஸ்வரி உள்ளிட்ட 5 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அருணாவின் கணவர் ராமன் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி