ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்களை அழித்து, வரப்புகளை உயர்த்தி இயற்கை விவசாயத்தில் தமிழர் வேளாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் ஈடுபட்டு வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் நரசிங்கநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவர் தமிழர் வேளாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வும் செய்து வருகிறார்.