ராமநாதபுரம்: ஆவின் பால் மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட ஆவின் பால் மையத்தை பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று காலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு பதில் தெரிவிக்கையில் திருப்பரங்குன்றம் தான் முருகன் கோயில் என உறுதியாகி விட்டது. 

நூறாண்டுகளுக்கு மேலாக தர்கா இங்கு உள்ளது அது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. பிறகு என்ன? பக்தர்கள் சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தர்காவும் இருந்து வருகிறது. அதுவும் ஒரு இடத்தில் இருக்கிறது. இதில் யாருமே சொந்தம் கொண்டாட முடியாது. இது மதசார்பற்ற ஆட்சி என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி