பரமக்குடி: குழந்தை இயேசு கோவிலில் பங்கு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

பரமக்குடி குழந்தை இயேசு கோவிலில் பங்கு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு கோவிலில் 9ம் ஆண்டு பங்கு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவிற்கு வருகை தந்த பரமக்குடி வட்டார அதிபர் இருதயராஜிற்கு குழந்தை இயேசு கோவில் சார்பாக மேளதாளம் முழங்க பெண்கள் கோலாட்டம் ஆடி சிறப்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து விழாவானது அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை உறுதி பூசுதல் விழா நடைபெற உள்ளது.தொடர்ந்து நவநாள் திருப்பலி 11ஆம் தேதி தேர் பவனி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி பெருவிழாவாக முதல் இறை உணவு விழா கொண்டாடப்படும்.அதன் பின்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி