ராமநாதபுரம்: மீன்பிடி அனுமதி சீட்டு பெற அறிவுறுத்தல்

விசைப்படகு மீனவர்கள் முறையாக மீன்வளத் துறை அலுவலகத்தில் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற பின்னரே மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மீது தமிழ் நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தவறாமல் உயிர் காப்பு மிதவை (Life Buoy), உயிர் காக்கும் சட்டை (Life jacket) போன்ற தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விசைப்படகு பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு சான்றிதழ், மீன்பிடி அனுமதி சீட்டு, மீனவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை முதலிய ஆவணங்களை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது மீனவர்கள் இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்தி