இந்நிலையில் இந்தப் பள்ளியில் கடந்த சில மாதங்களாக மாணவர்களிடையே அடிக்கடி பிரச்சினை சண்டை ஏற்படுவது வழக்கமாகி இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியே வந்த போழுது ஒரு மாணவன் சைக்கிளில் வந்த இரண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என தெரிய வந்தது. நேற்று வகுப்பறையில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற போழுது பிட் வைத்து எழுதிய மாணவனை இரண்டு மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த மாணவன் சக மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆகையால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருந்து ஒழுக்கமான முறையில் நடப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.