மண்டபம்: காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே பிள்ளைமடம் பேருந்து நிலையம் எதிரில் நேற்று (நவ.23) மாலை, ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற காரும், ராமேஸ்வரத்திலிருந்து வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் துரைமுருகன் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி