ராமநாதபுரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கோரி ராமநாதபுரம் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் வெள்ளையம்மாள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், முன்னாள் தலைவர் தரணி முருகேசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலர் அமுதவல்லி, மாவட்ட பொதுச் செயலர்கள் சண்முகநாதன், குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குப்புராமு, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி