இராமேஸ்வரம் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான அனுமதியின்றி, போக்குவரத்து விதிகளை மீறி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவதால், ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாண்புமிகு மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைகள் குறித்தும், ஆட்டோ தொழிலாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலை கேள்விக்குறியாக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.