சித்திரைத் திருவிழா சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (பிடாரி அம்மன்) திருக்கோவில் சித்திரைத் திருவிழா மே 27 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அம்மன் சிம்ம வாகனத்தில் நான்கு ரத வீதிகள் வழியாக வான வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இளைஞர்களால் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி