ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சேதுக்கரை கடற்கரையில் அதிகாலை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 2 சரக்கு வாகனங்களில் சோதனை செய்தனர்.
அதில் 945 கிலோ பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 சரக்கு வாகனங்களையும், அதிலிருந்த பீடி இலை பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.