ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 92 வயது மூதாட்டி ஞானசுந்தரி தனது வீட்டில் மரணமடைந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்க நகைகள் மாயமானது. வீட்டில் பணிபுரிந்த வேலைக்காரப் பெண் அன்னலட்சுமியிடம் டவுன் போலீசார் விசாரித்ததில், நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அன்னலட்சுமி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.