ராமநாதபுரம்: மின் கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா செவ்வாய்பேட்டை பகுதியில், மின் கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ந்து கொண்டிருந்த நான்கு மாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பாண்டியகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஞானசௌந்தரி என்பவருக்குச் சொந்தமான இரண்டு காளை மாடுகள் மற்றும் ஒரு பசு மாடு, அதே பகுதியைச் சேர்ந்த அருள்சாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு மாடு என மொத்தம் நான்கு மாடுகள்  உயிரிழந்தன.

தொடர்புடைய செய்தி