புதுமடம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊமையன்கூடா கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மரைன் போலீசார் சோதனை நடத்தினர். டிராக்டரில் இருந்து நாட்டு படகில் பீடி இலைகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் டிராக்டரில் இருந்த 1530 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.