ராமநாதபுரம் மாவட்டம், நவம்பர் 21 அன்று உலக மீனவ தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்தின் அடியில் கடலோரப் பகுதியில் மீனவர்கள் ஒன்றுகூடினர். மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் சக மீனவர்கள் மீன்வளத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பெருமைகளைப் பற்றி எடுத்துரைத்து தினத்தைக் கொண்டாடினர். இந்த நிகழ்வில் ஏராளமான மீனவப் பெண்களும் பங்கேற்றனர்.