ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் ஸ்ரீ அழகிய மீனாள் ஆலயத்தில் 37வது ஆண்டு பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா நடைபெற்றது. கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கிய விழாவில், தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.