ராமநாதபுரம்: பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

ரூ. 1.86 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கமுதி பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் இன்று (ஜூலை 31) திறந்து வைத்தார். 

இதனை ஒட்டி கமுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி