படகு மோதி பள்ளி மாணவன் பலி..!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த தெற்கு நரிப்பையூர் கடற்கரைக்கு பள்ளிகளின் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களுடன் பயிலும் சக நண்பர்கள் 18 பேருடன் வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா வந்த காரியாபட்டி பகுதியை சேர்ந்த நாகூர்கனி மகன் முகம்மது சலாம் (16) என்ற மாணவன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை தள்ளி கடலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு மோதியதில் படுகாயம் அடைந்தான்.

இதைப்பார்த்த அவருடன் வந்தவர்கள் உடனே முகம்மது சலாமை கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாலிநோக்கம் மெரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி