சாலை வசதி செய்து தர கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கடலூர் வட்டம் ஏ. உசிலங்குளம் ஊராட்சியில் உள்ள சாலை பல வருடங்களாக சரிசெய்து தர கோரிக்கை அப்பகுதி மக்கள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் அரசு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை சாலை அமைத்துதரவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் இந்த சாலையில் உள்ள வேடகரிசல்குளம், ஏ. உசிலங்குளம், எம். புதுக்குடியிருப்பு, மணிவலை, வெள்ளம்பள்ளி போன்ற சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் பலதரப்பு மக்கள் பயணம் செய்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் உட்பட இந்தச் சாலையில் தான் கடந்துசெல்கின்றனர். எனவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்தச் சாலைகளை சரிசெய்துதர வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி