இராம்நாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

இராமநாதபுரம் மாவட்டம், திம்மநாதபுரம் கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செல்வ பெருமாள் மீது வழக்கு பதியப்பட்டது. கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவிதா உத்தரவின் பேரில், பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி