தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண். 07355) சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 7 முதல் 28 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் (07356) இயக்கப்படும். மேலும், ஹூப்ளியில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் (07355) வருகிற ஜூன் 8 முதல் 29 ஆம் தேதி வரை (திங்கட்கிழமை) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.