ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. ரூ.10 கோடி இழப்பு

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டு, தினசரி ரூ. 10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கச்சிமடம் பகுதியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி