ராமநாதபுரம்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூன் மற்றும் வேட்டைகாரன் ஆகிய இருவர் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 38 சவரன் தங்க நகைகள் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி