இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், நேற்று முன்விரோதம் காரணமாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலகணபதி மீது ஆனையூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முத்துமீரான் உள்ளிட்ட 7 பேர் காரில் வந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். காயமடைந்த பாலகணபதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் போலீஸார் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.