ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, தனிக்கொடி என்பவரின் மனைவி பாப்பா (70) வீட்டில் இருந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் செய்வினை கோளாறு இருப்பதாக கூறி, பரிகாரம் செய்வதாக நம்பவைத்து, கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றார். பாப்பாவை தள்ளிவிட்டு தப்பிச் சென்ற அந்த நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.