இராமநாதபுரம்: ஆட்டோ மற்றும் லாரி மோதி விபத்து

ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் உச்சிப்புளி பகுதியில் லாரி மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன் படுகாயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி