கடலாடி கிராமங்களில் இரவில் மழை, பகலில் அடர்ந்த மூடுபனி

கடலாடி வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. போதுமான மழை தற்போது இல்லாமல் அவ்வபோது விட்டு விட்டு மழை வருகிறது. இன்று காலையில் மூடுபனி அதிகமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பனியை வியந்து பார்த்தனர். மூடுபனியால் சாலைகள் தெளிவாக தெரியவில்லை என்று வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். மழை அளவு குறைவதால் மூடுபனி அதிகமாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி