ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம் மற்றும் பல்வேறு மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.