அபிராமம் அருகே உடையநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதிகளுக்கு நடிகர் சசிக்குமார் படப்பிடிப்புக்காக வந்திருந்தார். இவர்களுடன் படக்குழுவினரும் மற்றும் துணை நடிகை நடிகர்களும் அபிராமம் சுற்றுப்புற கிராமங்களில் படப்பிடிப்பு எடுத்தனர். நடிகர் சசிகுமாரை காண ரசிகர்கள் குவிந்தனர். அபிராமம் கிராமத்துக்கு வருகை தந்த சசிகுமாருக்கு கிராம மக்கள் வரவேற்பளித்தனர்