கடலாடி வட்டார வளர்ச்சி உட்பட்ட வாலிநோக்கத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு தற்போது கனமழை பெய்து வருகிறது. கடற்கரை வெப்பக் காற்று வீசிய நிலையில், மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை நீண்ட நாட்களாக இருந்த வெயிலின் தாக்கத்தைக் குறைத்துள்ளது.