இக்கோவிலுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு கடந்த ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பௌர்ணமி திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளும் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை சாமி புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய நிலையில் வீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டு தேர்வாடம் பிடித்து 'ஓம் சக்தி ஓம் சக்தி' என்று கோவில் தெற்கு வாசல் பகுதியில் நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து மாலை கோவில் தெற்கு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை மாலை பொதுமக்களும் பக்தர்களும் இழுத்து வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். இத்தேரோட்டத்தைக் காண வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளார்கள்.