ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது கட்டு நிகழ்ச்சியில் 35 காளைகள் களமிறங்கின. இதில் 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.