கமுதி: மாநாட்டுக்கு என்னை கூப்பிடவில்லை.. மதுரை ஆதீனம் பேட்டி

கமுதி அருகே உள்ள காடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன், கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் ஸ்ரீ லஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடப்பட்டதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை வந்தால் சொல்கிறேன். குருபூஜை வேலை நடைபெற்று வருகிறது என்றார்

தொடர்புடைய செய்தி