இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட 2 அடி உயரம் உள்ள களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின்னர் இன்று (செப்.,08) விநாயகர் சிலைகள் நகர் முழுவதும் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
கமுதி ஊரணி கரையில் பள்ளிக் குழந்தைகள் விநாயகரை தோப்பு கரணம் போட்டு, பாடலோடு, நடனமாடி கரைக்க வழியனுப்பி வைத்தனர். பின்னர் விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு ஊரணியில் கரைக்கப்பட்டது
இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.