ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜகண்ணப்பன், முத்துராமலிங்கபுரம் பட்டி, சாம்பக்குளம் இந்திரா நகர், சாம்பக்குளம், விக்கிரமபாண்டிபுரம், கீழக்கொடுமலூர், மேலக்கொடுமலூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க அவர் ஆதரவு கோரினார். சாம்பக்குளம் கிராமத்தில் பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.