மாரத்தான் போட்டியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர் தூரமும் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, ஓட்டப் பாலம், காட்டுப் பரமக்குடி, மணிநகர், தெளிச்சாத்தூர், நல்லூர் என மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம் சான்றிதழும் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கினார். இப்போட்டியில் மதுரையை சேர்ந்த கண்ணன் 70 வயதில் 101வது மாரத்தான் போட்டியை கடைசியாக வந்து முடித்து வைத்தார். முதியவர் 70 வயதிலும் மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியது.